--> -->

தென் சூடானில் கடமையாற்றும் இலங்கை இராணுவ மருத்துவ குழுவுக்கு பாராட்டு

ஜூன் 11, 2021

தென்சூடான் போர் நகரில் நிறுவப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் 7வது குழு சேவையில் ஈடுபட்டுள்ள  இரண்டாம் நிலை வைத்தியசாலையின்  பணிகள் பாராட்டத்தக்கவைகளாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஐ.நா. அமைதி காக்கும்  துணை படையின்  மருத்துவ அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் வைத்தியர் ரிஃபாத் ஸமான் தலைமையிலான குழு மருத்துவமனையின் செயற்பாடு குறித்த தயார்நிலை மதிப்பீடு செய்து விடுத்துள்ள பரிந்துரைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவ சேவை, குழு மற்றும்  கிழக்கு துறை ஊழியர்களுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு, கோவிட் 19 தொற்று தடுப்பு நடவடிக்கைக்கான தயார்நிலை, கொவிட் -19 பி.சி.ஆர் வசதி, அவசர சிகிச்சை தயார்நிலை மற்றும் விமான மருத்துவ திறன்கள் தொடர்பாக ஆராய்ந்த இத் குழு, இலங்கை இராணுவ மருத்துவ குழுவின் பணிகளை  மிகவும் பாராட்டியுள்ளதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.