--> -->

சட்டவிரோத சுறா மீன் பிடியில் ஈடுபட்டோர் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது

ஜூலை 13, 2021

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையின் மூலம் பிடிக்கப்பட்ட தடைசெய்யப்பட சுறா மீன் சதைகள் 27 கிலோகிராமை வைத்திருந்ததன் பேரில் மீன்பிடி படகு ஒன்றுடன் சந்தேகநபர்கள் ஐவர் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயிலிட்டி மீன்பிடி துறைமுக கடலோர பாதுகாப்பு படையின் கடற்தொழில் கண்காணிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தலில் ஈடுபடும் படை வீரர்களினால் ஒரு மாத கால மீன்பிடித்தலுக்குப் பின்னர் கரை திரும்பிய படகில் இருந்து சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட சுறா மீனின் பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட சுறா மீனின் பாகங்கள் ஏனைய மீன் இனங்கள் உடன் சேர்த்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

‘எந்த சுறா உயிரினங்களின் பகுதிகளையும்’ கப்பலில் வைத்திருப்பது, மாற்றுவது அல்லது தரையிறக்குவது என்பது சுறா மீன்வள மேலாண்மை (உயர் கடல்) விதிமுறைகள், 2015 இன் கீழ் ஒரு குற்றமாகும் என கடலோர பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட சுறா மீனின் பாகங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்தொழில் திணைக்கள பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.