--> -->

கடற்படை வைத்தியசாலைக்கு புதிய ஹீமோடையாலிசிஸ் பிரிவு

ஜூலை 16, 2021

வெலிசர கடற்படை பொது வைத்தியசாலையின் புதிதாக நிறுவப்பட்ட ஹீமோடையாலிசிஸ் பிரிவு நேற்று (ஜூலை 15) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

புதிதாக ஏற்படுத்தப்பட்ட இந்த வசதிகளினால் சிறுநீரகத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளை நிர்வகிப்பதை எளிதாகியுள்ளது. மேலும் இதன்மூலம் அனைத்து சேவை மற்றும் ஓய்வு பெற்ற கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் டயாலிசிஸ் சிகிச்சையையும் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படை நலன்புரி பணிப்பகத்தின் மூலம் நிதியுதவியளிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு கடற்படையின் சேவா வனிதா பிரிவு அத்தியாவசிய வளங்களை வழங்கியதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதார வழிகாட்டுதல்களின்படி இந்த நிகழ்வு நடைபெற்றதாக கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வில் கடற்படையின் சேவா வனிதா பிரிவு தலைவி திருமதி. சந்திமா உலுகேதென்ன, கடற்படை அதிகரிகாரிகளின் பிரதானி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா மற்றும் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.