--> -->

தேசிய பரா ஒலிம்பிக் கமிட்டியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

ஜூலை 17, 2021

விளையாட்டு அமைச்சு, 'உயர் செயல்திறன்' விளையாட்டு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 'விளையாட்டுப் போட்டிகளில் புத்துணர்ச்சியுடனான விளையாட்டு திறன்களை மேம்படுத்துவதற்கும், விளையாட்டு வீரர்களிடையே விளையாட்டு திறமைகளை மேம்படுத்தவும்
விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்துடனும், தேசிய விளையாட்டு கவுன்சிலின் தேசிய பரலம்பெம்பிக் கமிட்டியுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை கைச்சாத்திட்டுள்ளது.

விளையாட்டு அபிவிருத்தி திட்டம், எதிர்வரவுள்ள ஆசிய பரா விளையாட்டுப் போட்டி 2022 மற்றும் ஏனைய சர்வதேச போட்டிகளில் சிறந்த வீரர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தேசிய விளையாட்டு தெரிவுக்குழு தலைவரும் தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினரும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய, தேசிய பரா ஒலிம்பிக் குழுவின் தலைவர் கேர்ணல் எல்.ஆர்.ரி.டி ஹேரத் ஆகியோர் கைச்சாத்திட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

விளையாட்டுகள், பாரா ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகள் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு கெளரவ அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ரூ. 47 மில்லியனை ஒதுக்கியாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள பரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பற்றும் 9 வீரர்களில் இராணுவத்தில் இருந்து ஏழு விளையாட்டு வீரர்களும், கடற்படையிலிருந்து ஒரு விளையாட்டு வீரரும் மற்றும் சிவில் துறையிலிருந்து விளையாட்டு வீரரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.