--> -->

மகா சங்கத்தினரின் வதிவிட மடாலயம் இராணுவத்தால் புதுப்பிப்பு

ஜூலை 19, 2021

ஜனாதிபதியின் 'கம சமக பிலிசந்தர' திட்ட பணிப்புரைக்கமைய கெபிதிகொல்லாவ, விஹாரஹல்மில்லேவ ராஜமஹா விஹாரவில் உள்ள பழைய 'சங்கவாசய' (குடியிருப்பு மடாலயம்) இரணுத்தினரால் புனரமைக்கப்பட்டது.

5 (வி) கஜாபா ரெஜிமென்ட் மற்றும் பொறியியலாளர் சேவைகள் படையணியின் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் 623 பிரிகேட் கமாண்டர் கேணல் ரோஹன் மெடகோடாவின் மேற்பார்வையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, புனரமைக்கப்பட்ட குடியிருப்பு மடாலயம் விஹாரையில் இடம்பெற்ற வைபவத்தின் போது வன்னி - பாதுகாப்புப் படையின் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டாராவினால் மகா சங்க உறுப்பினர்களுக்கு கையளிக்கப்பட்டது.