கடற்படையினரால் கண்டல் தாவரங்களை நடுகை செய்யும் பணிகள் தொடர்கிறது

ஜூலை 27, 2021

கடல் தாவர சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் கடற்படையினர் கடற்கரையினை தூய்மையாக்குமபணியினை முன்னெடுத்தனர். மேலும் கடற்கரை சூழலை பாதுகாக்கும் நோக்கில் தலைமன்னார் மற்றும் நாச்சிக்குடா பகுதிகளிலுள்ள கண்டல் சூழலில் கண்டல் தாவரங்களையும் நடுகை செய்தனர்.

கண்டல் சூழல் தொகுதியின் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றும் ஒரு ஸ்தாபனம் என்ற வகையில் கடற்படையிரனரால் கண்டல் சூழலை பாதுகாக்கும் சர்வதேச தினத்தையொட்டி கடற்படையின் வடமத்திய பிராந்திய கட்டளை தளபதி வைஸ் அட்மிரல் பந்துல சேனாரத்னவின் பணிப்புரைக்கமைய இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளில் கண்டல் சூழற்தொகுதி முக்கிய பங்கு வகிக்கின்றன, இதனால் பிராந்திய சமூகமும் ஒட்டுமொத்த நாடும் நன்மைகளைப் பெறுகின்றன.

குறித்த திட்டம் கொவிட்-19 பரவலைத் தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான கடற்படையினரை கொண்டு முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.