--> -->

முல்லேரியா வைத்தியசாலையில் புதிய வார்டு வளாகம் விமானப்படையினரால் நிர்மாணம்

ஆகஸ்ட் 04, 2021

இலங்கை விமானப்படை முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் புதிய வார்டு வளாகத்தின் நிர்மாண பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு சுகாதார அமைச்சர் கெளரவ. பவித்ராதேவி வன்னியாராச்சியிடம் நேற்று (ஆகஸ்ட் 3) கையளிக்கப்பட்டது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில் ஐந்து வார்டுகள் காணப்படுவதாகவும் இதில்160 நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கும் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தங்குவதற்குமான வசதிகள் காணப்படுவதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு செலவாகும் உத்தேச தொகை ரூ. 200 மில்லியன் என கணக்கிடப்பட்டிருந்த போதிலும்
விமானப்படை வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் நிறைந்த சேவைகள் காரணமாக ரூ. 35 மில்லியன் மாத்திரம் செலவாகியுள்ளது. இதன் மூலம் பாரிய நிதி சேமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை குறிப்பிட்டுள்ளது.

இந்நிகழ்வில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரண, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன, கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர், விமானப்படை சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கட்டுமான பணியில் ஈடுபட்ட படையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tamil