--> -->

கேரள கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் மூவர் கடற்படையினரால் கைது

ஆகஸ்ட் 14, 2021

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் இன்று காலை (ஆகஸ்ட்,14) கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 126 கிலோ கிராம் கேரளா கஞ்சா மற்றும் இரண்டு கிலோகிராமிற்கு மேற்பட்ட 'ஐஸ்' ரக போதைப்பொருள் என்பவற்றுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அந்த பொருட்களை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க கடலிலும், கடலோர எல்லையிலும் கடற்படை வழக்கமான ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கமைய, உத்தரா கடற்படை தளம் பருத்தித்துறை கடற்படை முகாம் என்பவற்றில் உள்ள கடற்படை வீரர்கள் வல்வெட்டித்துறை கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட விஷேட பாதை ரோந்து பணியின் போது சந்தேகத்தின் பேரில் வண்டியை சோதனையிட்டனர். இதன்போது சந்தேகநபர்கள் சுமார் 126 கிலோ கேரளா கஞ்சாவை 60 பொதிகளை 03 சாக்கு பைகளிலும் சுமார் 02 கிலோ மற்றும் 330 கிராம் ஐஸ் ரக போதைப் பொருட்களை பிளாஸ்டிக் கொள்கலனில் 03 பொதிகளாக மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அந்த பொருட்களை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட கெப் ரக வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருட்களின் போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி ரூ. 50 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ரோந்து நடவடிக்கை கொவிட்-19 பரவலை தடுக்கும் சுகாதார வழி முறைகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்து.

போது கைது செய்யப்பட்டகிளிநொச்சி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட சந்தேகநபர்கள் 32 தொடக்கம் 38 வயதுடையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொருட்கள் சகிதம் சந்தேக நபர்கள் மூவரும் மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.