--> -->

உயிர் காக்க இரத்த தானம் வழங்கும் இராணுவம்

செப்டம்பர் 01, 2021

பிரதான வைத்தியசாலைகளில் இரத்த மாதிரிகளுக்கு ஏற்பாட்டுள்ள தட்டுப்பாட்டினை பூர்த்தி செய்யும் வகையில் பனாகொட ஸ்ரீ போதிராஜாராமயாவில் நேற்று (ஆகஸ்ட் 31)  இரத்த தானம் வழங்கும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.  

இதற்கமைய, மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள படை வீரர்கள் வைத்தியசாலைகளில், வைத்திய சேவைகளை தடையின்றி  இயங்கச் செய்யும் வகையியல் இந்த இரத்த தானம் வழங்கும் செயற்பாட்டை முன்னெடுத்தனர்.

இந்த இரத்த தான நிகழ்வில் 270 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள், இரத்த தானம் வழங்க முன்வந்த அதேவேளை, நாரஹேன்பிட்ட தேசிய இரத்த வங்கி, ராகம மற்றும் களுத்துறை பிராந்திய இரத்த வங்கிகளின் மருத்துவ அதிகாரிகள், இராணுவத்தின் சுகாதார பணியாளர்கள்  சேவை வழங்கினர்.

தேசிய தலசீமியா மையத்தின் வேண்டுகோளையடுத்து, மேற்கு பாதுகாப்பு படை  தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான  ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பணிப்புரைக்கமைய குறித்த இரத்த தான  முன்னெடுக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.