--> -->

12 வருடங்களுக்கு பின்னர் கவசப் படையணியின் களத் துப்பாக்கிச் சுடும் பயிற்சி அமர்வுகள் ஆரம்பம்

ஒக்டோபர் 01, 2021

கற்பிட்டியிலுள்ள இலங்கை விமானப் படையின் துப்பாக்கிச் சுடும் களப் பயிற்சி தளத்தில், இரண்டு நாள் (செப்டம்பர் 21-22) இளம் கவச படையணி அதிகாரிகளுக்கான பாடநெறி, போர்க்கள கவச வாகன செலுத்துனர்களுக்கான பாடநெறி, துப்பாக்கி பிரயோகம் தொடர்பிலான பாடநெறி ஆகியவற்றை தொடரும் வாய்ப்பு 15 அதிகாரிகள் மற்றும் 130 சிப்பாய்களுக்கு 12 வருடங்களுக்கு பின்னர் மீட்டும் கிடைக்கப்பெற்றுள்ளது.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட காலாட்படை போர் வாகனம் ( BMP MK) 11 மற்றும் எட்டு சக்கர BTR-80 ரக மேம்படுத்தப்ட்ட கவச வாகனங்கள் இரண்டு, (AAPC) துப்பாக்கிகள் என்பவற்றுடன் இப்பயிற்சிகள் கவச வாகன பிரிகேட் மற்றும் கவச வாகன பயிற்சி நிலையத்தின் தளபதியுமான மேஜர் ஜெனரல் அனில் பீரிஸ் அவர்களின் மேற்பார்வையிலும் இலங்கை இராணுவ கவசப் படையணி படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட அவர்களின் வழிகாட்டலின் கீழும் புத்தலவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ அதிகாரிகள் தொழிலாண்மை மேம்பாட்டு மையத்தில் நடைபெற்றது.

மேற்படி பயிற்சிகள் அனைத்திற்குமான தயார் நிலைகள் மற்றும் பயிற்சி செயன்முறைகள் ஆகியன பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் எண்ணக்கருவுக்கமைவான “முன்னகர்விற்கான மூலோபாயத் திட்டம் 2020-2025” இன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நன்றி - www.army.lk