--> -->

மறைந்த கேர்ணல் பஸ்லி லாபிர் அவர்கள் தொடர்பாக இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தின் வருடாந்த கருத்தரங்கு

ஆகஸ்ட் 07, 2019

இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலைய வருடாந்த கருத்தரங்கு தொடரின் மற்றுமொரு பிரிவு பத்தரமுல்ல சுகுருபாயவில் அமைந்துள்ள இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தின் கேட்போர்கூடத்தில் இன்று (ஆகஸ்ட், 07 ) இடம்பெற்றுள்ளது.

இவ்வருட கருத்தரங்கு, 1996ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் திகதி முற்றுகையிடப்பட்ட முல்லைத்தீவு இராணுவத் தளத்தை மீட்பதற்கு துணிச்சலான நடவடிக்கையை முன்னெடுத்து தனதுயிரை தியாகம் செய்த இலங்கை இராணுவத்தின் முதலாவது விஷேட படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான மறைந்த கேர்ணல் பஸ்லி லாபிர் பீடப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பீ அவர்கள் தொடர்பாக நிகழ்த்தப்பட்டது. மறைந்த கேர்ணல் பஸ்லி லாபிர் அவர்கள் கடுமையான எதிரிகளின் போராட்டத்திற்கு மத்தியில் வான் வழியாக தரையிறங்கி மீட்புப் பணிக்கு தலைமை தாங்கி செயற்பட்டவர். அவர் மனிதாபிமான நடவடிக்கைகளின்போது கடுமையான காயங்களுக்கு உட்பட்டபோதும் அவரின் சக வீரர்களை தொடர்ந்தும் முன்னெடுத்து சென்றார். பின்னர் யுத்தகளத்தில் இடம்பெற்ற ஒரு வெடிப்பின் காரணமாக அவர் தனது உயிரை நாட்டுக்காக தியாகம் செய்தார்.

அன்றைய அவரின் தைரியமான இச்செயற்பாடானது 1500 சக படை வீரர்களின் உயிரைக் பாதுகாக்க நேர்ந்துள்ளது. இலங்கையில் துணிவுக்காக வழங்கப்படும் மிக உயர் விருதான “பரம வீர விபூஷணய” பதக்கம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட அவர், மரணத்தின் பின்னர் கேர்ணல் நிலைக்கு தரமுயர்த்தப்பட்டார்.

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அனைத்து போர் வீரர்களுக்காகவும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் குறித்த நிகழ்வு ஆரம்பமானதுடன் அதனை தொடர்ந்து மறைந்த கேர்ணல் லாபிர் அவர்களின் காணொளி ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. பின்னர் பாதுகாப்பு செயலாளரின் செய்தி பாதுகாப்பு செயலாளரின் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு செயலாளர் திரு. சுரேன் தயாரத்ன அவர்களால் வாசிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் “போர்வீர் கேர்ணல் பஸ்லி லாபிர் பீடப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பீ அவர்களின் காவியம்” எனும் தொனிப்பொருளில் பிரிகேடியர் எச் பீ ரணசிங்க அவர்களால் விரிவுரை நிகழ்த்தப்பட்டது. அத்துடன் விஷேட படையணியின் ஸ்தாபகர் மேஜர் ஜெனரல் காமினி ஹெட்டியாராச்சி (ஒய்வு ) அவர்களும் இங்கு உரை நிகழ்த்தினார்.

திருமதி. அனோமா லாபீர், இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலைய பணிப்பாளர் திரு. அசங்க அபேகுகுணசேகர, இராணுவ பிரதானி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் விமானப்படை பிரதானி எயார் வைஸ் மார்ஷல் எஸ்கே பத்திரன, விஷேட அதிரடிப்படையின் கட்டளைத்தளபதி எம் ஆர் லத்தீப், முன்னாள் தளபதிகள், அதிதிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.