--> -->

அலங்கார மீன்களை வளர்ப்பு திட்டம் இராணுவத்தினரால் ஆரம்பிப்பு

ஒக்டோபர் 28, 2021

அரசாங்கத்தின் நன்னீர் மீன் வளர்ப்புக்கு ஊக்கமளிக்கும் வகையில், கந்தகாடு இராணுவப் பண்ணையில் ‘திலப்பியா’ மீன் குஞ்சுகள் மற்றும் அலங்கார மீன்களை வளர்க்கும் முயற்சியில் இலங்கை இராணுவம் ஈடுபட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவத்தின் விவசாய உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பு பணிப்பகத்தின் விவசாய உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பினை மேற்கொள்ளும் படையினரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தில் 15,000 திலாப்பிய n மீன் குஞ்சுகள் மற்றும் 10,000 கோல்டன் கெண்டை அலங்கார மீன்கள் பண்ணையில் உள்ள தொட்டிகளில் விடப்பட்டுள்ளன.

இலங்கை தேசிய மீன்வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையுடன் கூட்டாக கலந்தாலோசித்து நிர்வகிக்கப்படும் இந்த திட்டம், ஏற்றுமதிக்காக அலங்கார மீன்களை வளர்ப்பதன் மூலம் அந்நிய செலாவணியை ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வின் அங்குராப்பண விழாவில் 3வது இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் விவசாய உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பினை மேற்கொள்ளும் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் டிஎல்சிஎன். முத்துதந்திரி உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tamil