--> -->

மிஹிந்தலை அனுலாதேவி சைத்தியவிற்கு பாதுகாப்புச் செயலாளர் விஜயம்

ஜனவரி 23, 2022

வழிபாட்டுத் தலங்களை தரிசிக்கும் நோக்கில் அனுராதபுரத்திற்கு வருகை தந்த பாதுகாப்புச் செயலாளரும், கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்ன இன்று (ஜனவரி 23) மிஹிந்தலை மிஹிந்து மகா சேயவிற்கு விஜயம் செய்தார்.

இதன்போது அவர், அங்கு கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் மிஹிந்து மகா சேயாவின் புனரமைப்பு பணிகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை புனித தலத்தில் அமைந்துள்ள மிஹிந்து மகா சேய, மிஹிந்து லென் செனசுன மற்றும் விஹாரையின் புனித அறையின் புனரமைப்பு அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் இந்த விஜயத்தின் போது அனுராதபுரத்தில் உள்ள சந்தஹிரு சேய மற்றும் மிஹிந்தலையில் அமைந்துள்ள அனுலாதேவி சைத்திய என்பனவற்றிக்கும் விஜயம் செய்து வணக்க வழிபாட்டில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் மிஹிந்தலை ரஜ மஹா விகாரையின் பிரதான விஹாரதிபதி வண. வளவஹெங்குனவெவ தர்மரத்ன தேரர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே (ஓய்வு) ஆகியோரும் கலந்துகொண்டனர்.