--> -->

இந்திய குடியரசு தினத்தன்று மறைந்த இந்திய அமைதி காக்கும் படை வீரர்களுக்கு நினைவஞ்சலியுடன் மரியாதை

ஜனவரி 29, 2022

இலங்கை இராணுவ படைகளுடன் கைகோர்த்து விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்டு இலங்கையில் உயிர் நீத்த இந்திய அமைதி காக்கும் படை போர்வீரர்களின் நினைவு நாளை யாழ்ப்பாணம் பலாலி இந்திய அமைதி காக்கும் படையின் நினைவுத்தூபியில் இந்தியாவின் 73 வது குடியரசு தினமான புதன்கிழமை (26) நினைவுகூறப்பட்டது.

யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் திரு. ராம் மகேஷ் மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா ஆகியோர் இணைந்து இந்திய அமைதி காக்கும் படையின் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக நினைவுத்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்திய அமைதி காக்கும் படையில் 1991 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டைப் பாதுகாப்பதில் தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள்.

உயிர்நீத்த படையினரின் பெரும்பாலோர் 1987-1989 க்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதி காக்கும் படையின் நடவடிக்கையான “பவன் நடவடிக்கையின்’” போது தங்கள் உயிரை தியாகம் செய்தனர். யாழ்ப்பாணத்து இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரிகளும் சில சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

Courtesy - www.army.lk