--> -->

கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம் MATLAB மென்பொருளின் வளாக அளவிலான அனுமதிப்பத்திரத்தை செயல்படுத்துகிறது

பெப்ரவரி 08, 2022

ஜெனரல் சேர் ஜாேன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம், மாணவர்களின் கற்கைக்கு உதவுவதற்கும், உயர்நிலை ஆராய்ச்சித் திட்டங்களுக்கு மேம்பட்ட உருவகப்படுத்துதல்களை மேற்கொள்வதற்கும் உதவும் வகையில் MATLAB மென்பொருள் வளாகம், குறித்த மென்பொருளின் முழுமையான பயன்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கான உரிமத்தை தனதாக்கியுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக MATLAB மென்பொருள் வளாகம், குறித்த மென்பொருளின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தும் இலங்கையின் முதலாவது உயர்கல்வி நிறுவனாக திகழ்வதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 MATLAB மென்பொருள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு சமிக்ஞைகள் செயலாக்கம், படம் மற்றும் வீடியோ செயலாக்கம், கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் கணக்கீட்டு தகவல்கள் உயிரியல் தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைப்புகளை பகுப்பாய்வு செய்து மேம்படுத்துவதற்கான ஒரு நிரலாக்க மென்பொருள் என அந்தப் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.