--> -->

இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின்
ஐந்தாவது வருடாந்த கல்வி அமர்வு

பெப்ரவரி 11, 2022

இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் ஐந்தாவது வருடாந்த கல்வி அமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (பெப்ரவரி, 10) அத்திடிய ஈகிள்ஸ் லேக்சைட் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க பிரதம அதிதியாகவும், பிரதம பேச்சாளராகவும் கலந்துகொண்டார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.

நிகழ்விடத்திற்கு வருகை தந்த பிரதம அதிதியை இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் தலைவரும் இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமுமான பிரிகேடியர் கிறிசாந்த பெர்னாண்டோ வரவேற்றார்.

கௌரவ அதிதியாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ மனிதநேயவியல் துறையின் நிறுவனர் தலைவரும் பேராசிரியருமான பேராசிரியர் சரோஜ் ஜயசிங்க கலந்துகொண்டார்.


இராணுவ மருத்துவ சேவையில் சிறந்து விளங்கும் இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியானது 'இராணுவ மருத்துவத்தில் உலகளாவிய கடமைகள் - சர்வதேச இராணுவத்தை கட்டியெழுப்புதல் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இந்தநிகழ்வில் பதில் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன, இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் உறுப்பினர்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், கௌரவ அதிதிகள் மற்றும் மற்றும் துறை சார் அறிஞர்களும் கலந்து கொண்டனர்.