--> -->

6.5 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கடந்படையினரால் கைது

பெப்ரவரி 15, 2022

பருத்தித்துறை நெல்லியடி பிரதேசத்தில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 817 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கமைய இம்மாதம் (பெப்ரவரி) 14ம் திகதி நெல்லியடி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் வடக்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளையகங்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிளில் 817 கிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை கடத்திய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இதன்போது இந்த கடத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி ரூ. 6.5 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பருத்தித்துறை மற்றும் குடத்தனை பிரதேசங்களில் வசிக்கும் 23 மற்றும் 33 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இலங்கை கடற்படை பரந்த அளவிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.