--> -->

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மருந்து நிறுவனங்களுக்கு உயிர் சமநிலை ஆய்வுகளை வழங்குகிறது

ஜூலை 04, 2022

• கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் இரண்டு உயிர் சமநிலை ஆய்வுகளுக்கு நவெஸ்டா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
 
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் (KDU) மருந்து நிறுவனங்களுக்கு உயிர் சமநிலை (BE) ஆய்வு சேவைகளை வழங்குகிறது.

இதுவரை மேட்படி பல்கலைக்கழகம் பல உயிர் சமநிலை ஆய்வுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. அத்துடன் நாட்டில் வணிக ரீதியில் உயிர் சமநிலை ஆய்வு சேவைகளை வழங்கும் ஒரே நிறுவனமும் இதுவாகும். இதன் காரணமாக மருந்து நிறுவனங்கள் தங்கள் உயிர் சமநிலை ஆய்வுக் கோரிக்கைகளை இப்பல்கலைக்கழகத்திற்கு தொடர்ந்து அனுப்பி வருகின்றன. இதற்கமைய நவெஸ்டா பார்மசூட்டிக்கல்ஸ் (Navesta Pharmaceuticals) நிறுவனத்தின் ஆய்வுகளுக்கான இரு கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய அறிவுறுத்தல்களுக்கமைய மருந்து நிறுவனங்கள் தங்கள் ஒளடதங்களுக்கான பதிவை பெற உயிர் சமநிலை ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இவ் ஆய்வுகள் வேளிநாட்டில் மேட்கொள்ளப்படுவது அதிக செலவும் சிக்கல் மிக்கதுமாகும்.

ஃபுலுக்லொக்சஸிலின் Flucloxacillin மற்றும் கோ-அமொக்ஸிகிலெவ் (Co-Amoxiclav) ஆகிய இரண்டு ஒளடதங்களுக்கான உயிர் சமநிலை ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் நவெஸ்டா பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தினரருக்கிடையே சமீபத்தில் (ஜூலை 01) இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது, என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

பல்கலைக்கழகம் சார்பாக அதன் துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் மற்றும், இணை மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் (KDU-CARE) பேராசிரியர் துஷார வீரவர்தன ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

நவெஸ்டா பார்மசூட்டிக்கல்ஸ் சார்பாக அதன் இயக்குனர் ஜானக விக்கிரமசிங்க மற்றும் அதன் தொழிட்சாலைகள் தலைவர் அமித்குமார் அசோக்பாய் பிரஜாபதி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் சர்வதேச மருத்துவ அமைப்பின் ஒழுங்குமுறை செயல்பாடுகள் பற்றிய தேசிய ஆலோசகர் மூத்த பேராசிரியர் ரோஹினி பெர்னாண்டோபுள்ளே, லெப்டினன்ட் கேணல். பி.எச். பேமரத்ன உட்பட பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.