--> -->

லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ உற்பட அவருடன் உயிர்நீத்த போர்வீரர்கள் நினைவு படுத்தப்பட்டனர்

ஆகஸ்ட் 08, 2022

சமகாலத்தின் புகழ்பெற்ற போர் வீரனான லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ உற்பட அவருடன் பயணித்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன,  ரியர் அட்மிரல் மொஹான் ஜயமஹா, லெப்டினன்ட் கர்னல் எச்.ஆர் ஸ்டீபன், லெப்டினன்ட் கேணல் ஜி.எச். ஆரியரத்ன, லெப்டினன்ட் கேணல் ஒய்.என்.பலிபான, கமாண்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன்ட் கேணல் நளின் டி அல்விஸ், லெப்டினன்ட் கமாண்டர் சி.பி. விஜேபுர மற்றும் படைவீரர் டப். ஜெ. விக்கிரமசிங்க உள்ளிட்ட ஒன்பது பேர் அடங்கிய குழுவினர் , யாழ் குடாநாட்டில் அராலி முனையில் வைத்து 8 ஆகஸ்ட் 1992 அன்று நாட்டிற்காக தனது விலைமதிப்பற்ற உயிரை தியாகம் செய்து இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.

அந்த துரதிஷ்டமான நாளில் ஒரு சிறந்த போர்வீரர்களின் குழுவை இழந்த அதிர்ச்சியூட்டும் குண்டுவெடிப்பு சம்பவம் தேசத்தை அதன் மையத்தில் உலுக்கியதோடு, புலிகளுக்கு எதிராக போரில் ஈடுபட்டடிருந்த இராணுவத்தினரின் மன உறுதியையும் வெகுவாக பாதித்தது. ஒரு சிறந்த போர்வீரரான ஜெனரல் டென்சிலின் இழப்பு, நன்றியுள்ள இலங்கையர்களின் குறிப்பாக அவரது சார்ந்த இலங்கை கவசப் படைப் படைப்பிரிவின் நினைவுகளில் என்றும் நிலைத்து நிற்கிறது.

அவரது 30வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அனுராதபுரத்தில் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து ராணுவ மரியாதை செலுத்தும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அவரது துணைவியார் திருமதி லலி கொப்பேகடுவ தலைமையில் திங்கட்கிழமை (8) சமய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டில் (2021), லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ நினைவு அருங்காட்சியகம் அராலி முனையில் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.