--> -->

அவுஸ்திரேலிய தூதுக்குழு ஒன்று கடலோரக் காவல்படையின் தலைமையகத்திற்கு வருகை தந்தது

ஒக்டோபர் 06, 2022

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் அவுஸ்திரேலிய தூதுக்குழுவொன்று நேற்று (ஒக்டோபர் 05) வெள்ளவத்தையில் உள்ள இலங்கை கடலோரக் காவல்படையின் தலைமையகத்திற்கு சென்று கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.

இந்த தூதுக்குழுவில், அவுஸ்திரேலிய எல்லைப் படையின் முதல் செயலாளர் இன்ஸ்பெக்டர் பிரட் செஹ்ந்தர், இன்ஸ்பெக்டர் ரெபேக்கா பிரேசர், இன்ஸ்பெக்டர் ஸ்டாதி வாம்வூலிடிஸ் மற்றும் ஒருங்கிணைப்பாளர் திருமதி ஷஷிகா பெரேரா ஆகியோர் இந்த சந்திப்பின் போது கலந்து கொண்டதாக கடலோரக் காவல்படையின் வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், கிரிந்தவிலுள்ள உயர் பயிற்சி மையத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், கடலோரக் காவல்படையின் திறனை மேம்படுத்துவதற்கும் உதவிகளை வழங்குவதில் இந்த கலந்துரையாடலின் போது முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது.

கடலோரக் காவல்படை தலைமையகத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் கட்டளை அதிகாரி ஆகியோர் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளுடனான இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.