--> -->

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

ஒக்டோபர் 19, 2022

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்ககாவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்க செயலாளர் திரு. டொனால்ட் லு இன்று (அக். 19) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்த அமெரிக்க  உதவிச் செயலாளர் மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் ஆகியோரை பாதுகாப்புச் செயலாளர் அன்புடன் வரவேற்றார். அதனைத்தொடர்ந்து  அவர்களுடன் சுமூகமான கலந்துரையாடல் ஒன்றில் கலந்துக்கொண்டார்.

இச்சந்திப்பின் போது ஜெனரல் குணரத்ன அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் திரு. டொனால்ட் லு வின் வருகையை நினைவுகூறுவிதமாக வருகை தந்த அமெரிக்க அதிகாரிகளுக்கு  நினைவு பரிசுகளை வழங்கினார்.

தேசிய புலனாய்வு பிரதானி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க (ஓய்வுபெற்ற)  மற்றும் அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினெண்ட் கர்ணல் அந்தனி நெல்சன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.