--> -->

மாலியில் உள்ள இலங்கை துருப்புக்களின் 'துணிகரமான நடவடிக்கைகளுக்காக' சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது

நவம்பர் 08, 2022

மாலியில் ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்களுக்கு அவர்களின் விலைமதிப்பற்ற பணியை அங்கீகரிக்கும் வகையில் அண்மையில் சிறப்பு பதக்கங்கள் வழங்கப்பட்டன.
 
மினுஸ்மா கிழக்கு நடவடிக்கைகளின் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் ஸ்டீபன் அண்டர்சன், இலங்கை அமைதிகாக்கும் படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் சிறப்பு பதக்கத்தை வழங்கி அவர்களின் சேவையைப் பாராட்டினார்.
 
மாலியின் பழங்குடி பயங்கரவாத குழுக்கள், ஐ.நா அமைதிகாக்கும் படைகளை குறிவைத்து வன்முறையை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், அவை அனைத்து ஐ.நா துருப்புக்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாகவும் இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.