--> -->

இராணுவத்தினர் வடமாகான சமூகங்களுக்கு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரக்கன்றுகள் விநியோகம்

செப்டம்பர் 14, 2019

அண்மையில் இராணுவத்தினர் வடமாகானத்தில் கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பெருந்தொகையான மரக்கன்றுகளை விநியோகித்துள்ளனர். நாட்டின் அபிவிருத்தி முன்னெடுப்பிற்கான நிலையான பொருளாதார தரங்களை அடைவதற்கும், தேசிய பசுமை முன்னெடுப்புக்கு வலிமை சேர்க்கும் வகையிலும் இம் மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதன்பிரகாரம், ஹடபிம அதிகாரசபையின் ஒத்துழைப்புடன் கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழுள்ள இராணுவத்தினர் மா பலா மற்றும் மரமுந்திரிகை உட்பட சுமார் 2000 மரக்கன்றுகளை இப்பிராந்தியத்தில் வசிக்கும் 300 சிவிலியன்கள் மத்தியில் ஆகஸ்ட், 09ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வின்போது விநியோகித்துள்ளனர்.

அதேதினம் பூநேரியன் அரசபுரகுலம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின்போது 120 சிவிலியன்கள் மத்தியில் இவ்வகையான மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

ஹடபிம அதிகாரசபையினால் விநியோகிக்கப்பட்ட இப்பெருமதிவாய்ந்த தரமான மரக்கன்றுகளில் 200 மா, 1150 பலா மற்றும் 910 மரமுந்திரிகைகள் உள்ளடங்குவதுடன், சூழலை பாதுகாக்கும் வகையிலான ஆர்வத்தை தூண்டும் இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் ஊடாக அதேவேளை, ஒரு இலாபகரமான பொருளாதார முதலீட்டை உருவாக்குவதுடன், எதிர்காலத்தில் அவர்களுக்கு உணவை பெற்றுக்கொள்ள ஒரு வழியாகவும் அமையும்.

இதேவேளை, இராணுவத்தினர் முல்லைத்தீவு பிரதேசத்திலும் 500 தென்னை நாற்றுகளை குறைந்தவருமானம் பெரும் 250 குடும்பங்களுக்கு விநியோகித்துள்ளனர்.