--> -->

அங்கவீனமுற்ற போர் வீரர்கள் சங்க உறுப்பினர்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளருடன் சந்திப்பு

செப்டம்பர் 25, 2019

நாட்டின் அனைத்து போர் வீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற போர் வீரர்கள் சங்க உறுப்பினர்கள் குழுவினர் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்  திரு. அனுராதா விஜேகோன் அவர்களை இன்று (செப்டம்பர், 25)அமைச்சில் சந்தித்துள்ளனர் .

இச் சந்திப்பின்போது இடம்பெற்ற கலந்துரையாடலில், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் அவர்கள் ஓய்வூதிய பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரவையினால் அங்கீகாரம் அளிக்கப்பட அமைச்சரவை பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து விரிவாக தெளிவுபடுத்தினார். இம்மாதம் 24ஆம் திகதியிலிருந்து அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து போர் வீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற போர் வீரர்கள் சங்கத்தின்  தலைவர் , அனுரா வெலிகம அவர்கள்  ஓய்வூதிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பாதுகாப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்படும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்ததோடு, அமைச்சரவையினால் அங்கீகாரம் அளிக்கப்பட அமைச்சரவை பத்திரத்தில் உள்ள சில பிரச்ச்னைகள் குறித்தும் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

இதன்போது, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் தான் இது தொடர்பாக கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

இனிகழ்வில், இராணுவ பேச்சாளர்,  பாதுகாப்பு அமைச்சின் ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் , மேஜர் ஜெனெரல் சுமித் அத்தபத்து, இராணுவ இணைப்பு அதிகாரி, பிரிகேடியர் டீ ஜே கொடித்துவக்கு, ஓய்வூதியம் கிளைகளின் முப்படை  உயர் அதிகாரிகள் மற்றும்  பொலிஸார்  கலந்துகொண்டனர்.