--> -->

‘அபிமன்சல’ யில் வசிக்கும் இராணுவ வீரர்கள் நாகதீபா விஹாரைக்கு விஜயம்

ஒக்டோபர் 28, 2019

அண்மையில் (ஒக்டோபர், 26) கம்புறுபிட்டிய "அபிமன்சல" ஆரோக்கிய இல்லத்தில் வசிக்கும் அங்கவீனமுற்ற வீரர்கள் குழுவினர் நாகதீப ரஜமஹா விஹாரைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இதன்போது கடல்மார்க்கமாக இங்கு விஜயம் மேற்கொள்ளவதற்காக கடல் போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களின் வழிகாட்டலின் பிரகாரம் ஆரோக்கிய இல்லத்தில் வசிக்கும் அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கு கடற்படையினால் இவ்வசதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் கடற்படை இறங்கு துறைமுகத்திலிருந்து நைனாதீவு இறங்கு துறைமுகம்வரை பாதுகாப்பாக கடற்படை படகில் அழைத்து செல்லப்பட்டதாக  கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விகாரைக்கு விஜயம் மேற்கொண்ட வேளையில், அங்கவீனமுற்ற படை வீரர்கள் குழுவினர் வடக்கு மாகாணத்தின் சங்கநாயக்க மற்றும் தலைமை விகாராதிபதி, பிரவீணாச்சார்ய வணக்கத்திற்குரிய நவடகல படிமகித்தி திஸ்ஸ தேரரை சந்தித்து அவரது ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, நைனாதீவு கடற்படை பிரிவில் இணைப்பு பெற்றுள்ள கடற்படை வீரர்கள் அங்கவீனமுற்ற படை வீரர்கள் குழுவினரின் வருகையினை முன்னிட்டு அவர்களுக்கு மதிய உணவு வழங்கி தமது நலன்புரி சேவைகளை மேற்கொண்டுள்ளனர்.