--> -->

சுவிட்சர்லாந்திற்கு தமது உள்நாட்டு பணியாளரை விடுவிக்க சுவிஸ் தூதரகம் விடுத்த கோரிக்கையை அரசு நிராகரிப்பு

டிசம்பர் 05, 2019

•  குடிவரவு மற்றும் குடியகழ்வு சட்டத்தின் கீழ் எந்த ஒரு இலங்கையரும் பெயர், கடவுச்சீட்டு அல்லது குடியுரிமைக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்காமல்  வெளிநாடு செல்ல முடியாது என குறிப்பிடுகிறது.  

•  பாதிக்கப்பட்டவருக்கு பூரண பாதுகாப்பை உறுதி செய்கிறது   

•  வீடியோ இணைப்பு மூலம் பாதிக்கப்பட்டவரின் உடல்நலக்குறைவு குறித்து உரிமை கோருகிறது

அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாகவும், தூதரக தகவல்களை வெளியிட அச்சுறுத்தியதாகவும் கூறிய உள்நாட்டு பெண் பணியாளரை மருத்துவ சிகிச்சைக்காக நாட்டிலிருந்து வெளியேற அனுமதிக்குமாறு சுவிஸ்சர்லாந்து தூதரகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.  

நாட்டின் நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ் - குடிவரவு மற்றும் குடியகழ்வு  சட்ட விதிகளின் பிரகாரம் – இலங்கையர் ஒருவர் தமது பெயர், கடவுச்சீட்டு அல்லது குடியுரிமைக்கான ஆதாரங்களை சமர்பிக்கமால் வெளிநாடு செல்ல முடியாது என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்கள் தெரிவித்ததார்.  

"எந்தவித அறிக்கையும் இல்லாமல், குறித்த நபரின் பெயர் அல்லது தேசிய அடையாளம் என்பன குறிப்பிடப்படாமல், குறித்த  நபர் யார் என்றும் அறிவிக்கப்படாமல் சுவிஸ் தூதரகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய குறித்த நபரை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க முடியாது." என மேலும் தெரிவித்ததார்.  

சுவிஸ் தூதரகத்திற்கு ஏற்கனவே இவ்விடயாம் தொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால்  தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குணவர்தன தெரிவித்துள்ளார்.  

இவ்வார ஆரம்பத்தில், சுவிஸ் தூதரகம் தமது தூதரககத்தில் பணிபுரியும் பெண் பணியாளரின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகத் தெரிவித்து, பணியாளரையும் அவளது குடும்பத்தினரையும் விஷேட நோயாளர் காவு விமானம் மூலம் சுவிட்சர்லாந்திலுள்ள மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு செல்ல அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் கோரியிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான நிகழ்வுகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷ அவர்களை தவறாக சித்தரிப்பதற்கு முன்னெடுக்கப்படும்  முயற்சிகளாகும் என அமைச்சில் இடம்பெற்ற விஷேட ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அமைச்சர் குணவர்தன அவர்கள் தெரிவித்தார்.

இதேவேளை, சுவிஸ் தூதரகத்தின் உள்நாட்டு பணியாளரை கடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக இடம்பெற்றுவரும் விசாரணையில் சுவிஸ் தூதரகத்தின் ஆதரவு குறித்து அரசாங்கம் இன்னும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அமைச்சர் குணவர்தன அவர்கள் தெரிவித்தார்.

உள்நாட்டு பெண் பணியாளரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் கேள்விக்குறியாக உள்ளதாக அமைச்சர் குணவர்தன தெரிவித்ததுடன், அவரும் அவரது குடும்பத்தினரும் விசாரணையை முன்னெடுக்க பொலிஸாருக்கு அறிக்கை ஒன்றை வழங்க பூரண ஒத்துழைப்பை வழங்குவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நவம்பர் 25ஆம் திகதி இடம்பெற்றதாக கூறப்படும் கடத்தல் சம்பவம் தொடர்பாக சுவிஸ் தூதுவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, நடந்துகொண்டிருக்கும் விசாரணையின் முன்னேற்றம் குறித்து விளக்கமளிக்க  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அனைத்து தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களை நேற்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு அழைப்பு விடுத்திருந்தது.

"பாதிக்கப்பட்டவர் இலங்கை மருத்துவர் ஒருவரினால் பரிசோதிக்கப்பட்டதாக எமக்கு அறிவிக்கப்படவில்லை, இருந்தபோதும், கடந்த ஞாயிற்றுக்கிழமை, சுவிட்சர்லாந்து மருத்துவர் ஒருவார் பாதிக்கப்பட்டவரை வீடியோ இணைப்பு மூலம் பரிசோதித்து சில அவதானிப்புகளை மேற்கொண்டு வழங்கப்பட அறிக்கை ஒன்று கிடைக்கப்பெற்றது."

பெர்னில் உள்ள இலங்கை தூதுவர் நாட்டின் சட்ட நடைமுறைகளை விளக்கியுள்ளதாகவும், விசாரணையைத் முன்னெடுப்பதற்கு பாதிக்கப்பட்டவர் முதலில் ஒரு அறிக்கையை வழங்க அனுமதிக்குமாறும் சுவிஸ் அதிகாரிகளுக்கு விளக்ககமளிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆர்யசின்ஹ தெரிவித்தார்.