--> -->

ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் மீளாய்வு

டிசம்பர் 31, 2019

ஓய்வுபெற்ற படை வீரர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் மீளாய்வு கூட்டம் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன அவர்களின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் திங்களன்று (டிசம்பர் 30) இடம்பெற்றது.

தேசத்தை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு, ஓய்வுபெற்ற முப்படை வீரர்களின் நிபுணத்துவத்தை பயன்படுத்தும் நோக்கில் இவ்விசேட செயற் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

ஓய்வுபெற்ற முப்படை வீரர்களுக்கான நலன்புரி முன்னெடுப்புக்கள் தொடர்பில் கூடிய கவனத்துடன் பாதுகாப்பு செயலாளர் செயல்பட்டு வருகிறார்.

குறித்த திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக மீளாய்வு கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டதுடன் V4U எனப்படும் தரவுத்தளம் மற்றும் ஒன்லைன் செயலி ஆகியன தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

இந்த கூட்டத் தொடரில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், இத்திட்டத்துக்கு அனுசரணை அளிக்கும் அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.