--> -->

ஹெய்லிஸ் குழுமம் சுற்றுச்சூழல் பொலிஸாருக்கு 10,000 கையுறைகளை நன்கொடையாக அளிப்பு

ஜனவரி 07, 2020

அரசாங்கத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்  எனும்  கருத்துட்டத்திற்கு அமைய ஒரு தொகை இரப்பர் கையுறைகளை ஹெய்லீஸ் குழுமத்தின் கீழ் செயல்படும் டிப் தயாரிப்பு நிறுவனம் பொலிஸ்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவுக்கு  இன்று (ஜனவரி,07)  கையளித்தது.

பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற வைபவத்தில்  டிப்  தயாரிப்புகள் நிறுவனத்தின்   தலைவரும் தலைமை நிர்வாகியுமான மொகான் பண்டிதகேவினால் கையளிக்கப்பட்ட  10,000 இரப்பர் கையுறைகளை பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன பெற்றுக்கொண்டார்.  

நன்கொடையாக அளிக்கப்பட   10,000 கையுறைகளை பாதுகாப்புச் செயலாளர் , பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிடம் கையளித்தார்.  பின்னர் அக் கையுறைகள் பொலிஸ்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர்  டி.எஸ்.கே. புஷ்ப குமாரவிடம்  பொலிஸ் மா அதிபர் கையளித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷாவின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்  எனும் கருத்துட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இந் நன்கொடையளிக்கப்பட்டது.

பொலிஸ், தற்போது, ​​சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்துவதற்காக சுற்றுச்சூழல் நேய  திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இந்த முயற்சியில், நன்கொடையாகயளிக்கப்பட்ட 10,000 ரப்பர் கையுறைகள்  பொலிஸ்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு வரப்பிரசாதமாக அமையவுள்ளது.

இந்த நிகழ்வில் குழும பணிப்பாளர் புஷ்பிக ஜனதீர, நிதிப் பணிப்பாளர் ரமேஷ் நானாயக்கார, விற்பனை பணிப்பாளர்  இந்திக குலதுங்க, குழும பாதுகாப்பு முகாமையாளர்  ஹேமந்த அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.