--> -->

கொரோனா வைரஸ்சுக்கு எதிராக இராணுவத்தினரின் முன்னெடுப்புடன் தயார் படுத்தப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட இடம்

ஜனவரி 31, 2020

(ஊடக அறிவிப்பு)

பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவமானது சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து வரும் இலங்கையர்களை கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் முகமாக இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தி வைப்பதற்காக இரண்டு புதிய தங்குமிட வசதிகளை தியத்தலாவையில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

அதிமேதகு ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சுகளின் அதிகாரிகளின் வழிகாட்டலுக்கமைய அரசின் விரைவான முன் தடுப்பு திட்டமானது செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரி மற்றும் இராணுவத் தளபதியின் ஆலோசனைக்கமைய மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 17ஆவது இராணுவ பொறியியலாளர் சேவைப் படையணியின் படையினரால் இரண்டு புதிய தங்குமிட வசதிகளை கொண்ட கட்டிட நிர்மாணிப்பு பணிகள் ஜனவரி செவ்வாய்கிழமை 28ஆம் திகதி 7.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை நிறைவுசெய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

இப் புதிய கட்டிடங்களானது 32 அறைகளுடன் அடிப்படை வசதிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும் இதில் வைத்திய உபகரணங்கள், WiFi தொடர்பாடல், வசதிகள், வெப்பமானிகள், வைத்திய ஒலி உபகரணங்கள்,மற்றும் ஒவ்வொருவருக்குமான பாதுகாப்பு உபகரணங்கள் உட்பட பல வசதிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

இராணுவ சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் தடுப்பு மருந்து, மனநல சேவைபிரிவின் பிரதிபணிப்பாளர் கேணல் டொக்டர் சவின் கமகே அவர்களின் வழிகாட்டலின் கீழ் திட்டமிடப்பட்ட முழுமையான பொது சுகாதார சேவையானது அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது தியத்தலாவ இராணுவ வைத்தியசாலையில் உள்ள கட்டளை அதிகாரி மற்றும் வைத்திய அதிகாரிகள் குழுவினரால் நிருவகிக்கப்படும்.

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் தியத்தலாவ இராணுவ வைத்திய சாலை வளாகத்தில் மேலும் மூன்று கட்டிடங்களானது குறித்த தேவைப்பாடுகளுக்கு பயன்படுத்த புணர்நிர்மானம் செய்ய ஆரம்பித்துள்ளது.

அதேநேரம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகளின் அவசர வேண்டுகோளிடற்கமைய இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் விமான நிலையத்திலுள்ள ஸ்கேனிங் குழுவினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் நிமித்தம் இராணுவத்தினரை அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

https://www.army.lk/ta/node/66869