--> -->

நன்கொடையாளர்களினால் உலர் உணவுப் பொதிகள் விநியோகிப்பு

மார்ச் 26, 2020

கொழும்பு மாவட்டத்தில் (அன்றாடம் தொழில் புரிகின்ற) குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் 85 உலர் உணவு பொதிகளை நன்கொடையாளர்கள் வழங்கி வைத்துள்ளனர். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வரியமக்களுக்கு இவ் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நன்கொடைகள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களிடம் இன்று (மார்ச் 26) அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

கொழும்பிலுள்ள சகல சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களின் ஒத்துழைப்புடன் குறித்த நன்கொடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றாடம் உழைத்து சாப்பிடும் மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது சிவில் சமூகம் என்ற வகையில் தமக்கு பொறுப்புக்கள் காணப்படுவதாகவும், இக்கட்டனான சூழ்நிலையின்போது கொரோனா வைரஸ் தொற்றுநோயை ஒழிப்பதில் அரசினால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு நாம் முன்வந்து உதவ வேண்டும் என தாங்கள்  அனைவரும் உணர்ந்ததாகவும், அவர்கள் தெரிவித்தனர்.   

கொழும்பில் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு ஒவ்வொன்றும் சுமார் 2,500 ரூபாய் பெறுமதியான 625 க்கும் அதிகமான பொதிகள் இன் நன்கொடையாளர்கள் குழுவினரால் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளன.