--> -->

போர்வீரர்களை சார்ந்து வாழ்பவர்களுக்கு நிவாரணம் அளிக்க அமைச்சரவை அங்கீகாரம்

ஏப்ரல் 29, 2021

யுத்தத்தின் போது உயிர் நீத்த படைவீரர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் பாதுகாப்புச் செயலாளர் மேலும் விளக்கமளிக்கையில் :-

•    பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக  அங்கவீனமுற்ற முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்> அங்கவீனமுற்ற முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களின் மரணத்தின் பின் அவர்களில் தங்கி வாழ்வோர்களுக்கு அவர்களின்  ஆயுட்காலம் வரை வழங்கப்படும்.  

•    பரிந்துரைக்கப்பட்ட குழுவினரால் தொடர்புடைய சம்பவங்கள் ஆராயப்பட்ட பின்னர்,  பணியில் இருக்கும்போது அங்கவீனமுற்ற முப்படை  / பொலிஸ் வீரர்களுக்கும் மற்றும் பபயங்கரவாதமற்ற ஏனைய செயற்பாடுகளால் உயிரிழந்த  படை வீரர்களில் தங்கிவாழ்வர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும்.

•    யுத்த நிலைமையின் விளைவாக யுத்தத்திற்குப் பிந்தைய நடவடிக்கைகளின் போது (வெடிபொருட்களை அகற்றுதல் போன்ற) அங்கவீனமுற்ற /உயிரிழந்த  முப்படை  / பொலிஸ் வீரர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட குழுவினரால் தொடர்புடைய சம்பவங்களை ஆராய்ந்த பின்னர்  நிவாரணம் வழங்குதல்.

•    பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக அங்கவீனமுற்று சேவையில் இருந்து விடுப்பு பெற்ற   முப்படை / பொலிஸ் வீரர்களுக்கு 55 வயது வரை  வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்,  அவர்கள் 55 வயதிற்கு முன்னர் மரணமடைந்தாலும் அவரில் தங்கி வாழ்பவர்களுக்கு மரண மடைதவர்  55 வயது  வரை வாழ்கின்றார் எனக்கருதி அவரின் வயதெல்லை வரை சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்  வழங்கப்படும்.

•    பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக ஏற்பட்ட இயலாமையின் விளைவாக தற்கொலை செய்து கொள்ளும் ஒரு படை வீரரில்  தங்கி வாழும் நபர்களுக்கு மரணமடைந்த படைவீரர்   55 வயது  வரை வாழ்கின்றார் எனக்கருதி  55 வயது வரை  சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்  வழங்கப்படும்.