பாதுகாப்பு செய்திகள்
அரச நிறுவனங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்
முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆவது பெனடிக்ட் திருத்தந்தை ஆற்றிய மகத்தான சேவைகளை போற்றுமுகமாக மற்றும் அவரின் விண்ணேற்றத்தை குறிக்குமுகமாக இன்று (05 ஜனவரி) அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பணித்துள்ளார்.
கடற்படையின் புதிய தலைமை அதிகாரி பதவி ஏற்றார்
ஜனாதிபதி மற்றும் ஆயுதப்படைகளின் தளபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன 2022 டிசம்பர் 23 முதல் இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டாக்காவில் நடைபெற்ற நான்காவது தெற்காசிய செபக் டக்ரா போட்டியில்
இராணுவ வீரர்கள் 5 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்
அண்மையில் பங்களாதேஷின் டாக்கா நகரில் நடைபெற்ற 4வது தெற்காசிய செபக் டக்ரா போட்டியில் இலங்கை தேசிய செபக் டக்ரா குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை இராணுவ வீரர்கள் கலந்து கொண்டு 5 வெண்கலப் பதக்கங்களை வெற்றி பெற்றனர்.
அனர்த்த முகாமைத்துவ பிரிவின் இணையதளம் ஆரம்பித்து வைக்கப்பட்டது
பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கான www.disastermin.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களினால் கொழும்பிலுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இன்று (ஜன. 02) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இராணுவத்தினர் கும்புறுப்பிட்டி கிராமத்தில் புதிய நீர்
சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்தனர்
கிழக்கு (SFHQ-E) பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள இலங்கை இராணுவத்தின் 17 ஆவது இலங்கை தேசிய காவலர் (SLNG) படையினர்களினால் அண்மையில் கும்புறுப்பிட்டியில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டது.
புதிய கடற்படைத் தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரெமித பண்டார தென்னகோனை இன்று (டிசம்பர் 30) சந்தித்தார்.
இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகைகள்
இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு கல்விப் புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.
2004 சுனாமியினால் உயிரிழந்தவர்கள் நினைவு கூறப்பட்டனர்
2004 ஆம் ஆண்டு 35,000 க்கும் அதிகமான மக்களின் உயிரைக் காவுக்கொண்ட அதிர்ச்சியூட்டும் சுனாமி பேரலையின் 18 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 'தேசிய பாதுகாப்பு நாள்' நிகழ்வு இன்று (டிசம்பர் 26) காலை 8.45 மணியளவில் காலி தெல்வத்தையிலுள்ள பெரலிய சுனாமி நினைவிடத்தில் நடைபெற்றது.
நத்தார் தினச் செய்தி
இருளை நீக்கி மனிதர்களிடத்தே சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையையே நத்தார் பண்டிகைக் குறிக்கின்றது.
பாதுகாப்பு செயலாளர் தேசிய மாணவர் படையணி தலைமையகத்திற்கு விஜயம்
பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன இன்று (டிசம்பர் 23) பாமன்கடயில் உள்ள தேசிய மாணவர் படையணி தலைமையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஜெனரல் கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார்
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஓய்வுபெற்ற ஜெனரல் எஸ்.எச்.எஸ். கோட்டேகொடவை கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நியமித்துள்ளார்.