பாதுகாப்பு செய்திகள்
நாட்டில் பல இடங்கள் மலையுடன் கூடிய காலநிலை
பிற்பகல் அல்லது இரவு வேளையில் நாட்டின் பல மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (ஜன. 17) காலை வெளியிடப்பட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கைக்கமைய, மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐஎன்எஸ் டெல்லி' கப்பலானது திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது
இந்திய கடற்படைக்கு சொந்தமான "ஐஎன்எஸ் டெல்லி" என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று (ஜனவரி15 ) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலுக்கு கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்பு அளிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
நாங்கள் முழு உலகத்திற்கும் நண்பர்கள் யாருடைய எதிரிகளும் அல்ல
- பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
உலகளாவிய புவிசார் அரசியல் நலன்களின் சமீபத்திய முன்னேற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் ஒரு தீவு தேசமாக நமது நோக்கங்களை மறுவரையறை செய்வது இன்றியமையாதது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை
இராணுவத்தின் பலம் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி ஆகியன ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றன. அவை ஒன்றாக இருந்த போதிலும் ஒன்றுடன் ஒன்று வெளிப்படையாக தென்படுவதில்லை.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்
இலங்கைக;கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அதிமேதகு காலித் நாசர் சுலைமான் அல்அமெரி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் கிரிக்கட் வீராங்கனைக்கு புதிய வீடு நிர்மாணிப்பு
அண்மையில் தேசிய மட்டத்தில் சாதனைகளை புரிந்து 19 வயதுக்குட்பட்ட பெண்கள் தேசிய கிரிக்கெட் அணியில் அங்கம் வகிக்கும் யாழ்ப்பாணம் சுள்ளிபுரத்திலுள்ள விக்டோரியா கல்லூரியைச் சேர்ந்த செல்வராசா கிரிஸ்டிகாவுக்கு இராணுவத்தினரால் புதிய வீடொன்று நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
இராணுவத்தினரால் யால சரணாலயத்தில் 60,000 மரக்கன்றுகள் நடும் திட்டம் முன்னெடுப்பு
வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சினால் யால சரணாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தேசிய மர நடுகை திட்டத்திற்கு மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் கீழுள்ள 121 வது பிரிகேடின் 20 வது இலங்கை சிங்கப் படையணி மற்றும் 18 வது கெமுனு ஹேவா படையினர் தங்களது ஒத்துழைப்பை வழங்கினர்.
அரச நிறுவனங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்
முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆவது பெனடிக்ட் திருத்தந்தை ஆற்றிய மகத்தான சேவைகளை போற்றுமுகமாக மற்றும் அவரின் விண்ணேற்றத்தை குறிக்குமுகமாக இன்று (05 ஜனவரி) அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பணித்துள்ளார்.





















