--> -->

பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவும் நோக்கோடு உலகளாவிய ரீதியில் பங்களிப்பு செய்யக்கூடியதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை உருவாக்க பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.

மே 17, 2023

நமது அனர்த்த முகாமைத்துவ துறையை உலக தரத்திற்கு இணையாக மேம்படுத்த விரும்புகிறோம்; எனவே, பேரிடர்களால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவுவதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை.

உலகளாவிய ரீதியில் பங்களிப்பு செய்யக்கூடியதாக மாற்றியமைக்கலாம் உத்தேசித்து ள்ளதோடு அதற்கு முன்னுரிமை அளித்துள்ளோம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார் .

கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (மே 17) அவரைச் சந்தித்த அமெரிக்க இராணுவ தூதுக்குழுவுடனான கலந்துரையாடலின் போது மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பை வளர்ப்பதன் அவசியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ராஜாங்க அமைச்சர், இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையை சரியான, அங்கீகரிக்கப்பட்ட அளவுக்குள் பேணப்படும் என்றும் கூறினார்.

செயல்திறனை அதிகரிக்க புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்க தூதுக்குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜான் பி ஹ்ரோனெக் அவர்கள் தந்திரோபாய மற்றும் செயற்பாட்டு மட்டங்களில் பயிற்சி மற்றும் பேரிடர் சூழ்நிலைகளின் போதும் அவசரகால நடவடிக்கைகளில் போதும் உதவுவதாகவும் கூறினார்.

அனர்த்தங்களின் போது சேதங்களைக் குறைப்பதற்கு கட்டிட ஒழுங்குமுறை உருவாக்குதல் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் மூலம் அவசர நிலைமை அறிவித்தல் முறையொன்றை நிறுவுதல் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாட ப்பட்டது.

மேஜர் ஜெனரல் ஜான் பி ஹ்ரோனெக், மொன்டானா மாநிலத்திற்கான அஜுடன்ட் ஜெனரல் மொன்டானா தேசிய படையின் தளபதியாகவும், இராணுவ விவகாரத் துறையின் இயக்குனராகவும் கடமையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (பாதுகாப்பு) ஹர்ஷ விதானாரச்சி, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுதந்த ரணசிங்க மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், லெப்டினன்ட் கேர்ணல் அந்தோனி சி.நெல்சன் ஆகியோரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.