புதிய தாதியார் இளங்கலை பட்டதாரிகள் பதவியேற்பு விழா

ஜனவரி 07, 2022

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் 35 மற்றும் 36 வது ஆட்சேர்ப்பு தாதியர் இளங்கலை மாணவர்கள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு , கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி, 04), பல்கலைக்கழகத்தின் சுகாதார விஞ்ஞான பீடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் தாதியர் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சுதத் வர்ணகுலசூரிய கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டார்.

இரண்டு ஆட்சேர்ப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் எழுபத்தைந்து தாதியர் இளங்கலை பட்டதாரிகள், இந்த விழாவின் போது விளக்கு மற்றும் தாதியர் தொப்பியைப் பெற்றுக் கொண்டு உறுதிமொழி எடுத்ததாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிகின்றன.
உறுதிமொழியேற்றதைத் தொடர்ந்து தொழில்முறை பாதையில் காலடி வைத்துள்ள அனைத்து தாதியர் இளங்கலை பட்டதாரிகளுக்கும் அங்கு குழுமியிருந்த துறைசார் வல்லுனர்கள் வாழ்த்து தெரிவித்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.