--> -->

நிகழ்வுகள்

பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

நாட்டிற்குள் வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுப்பது மற்றும் எதிர்கொள்வது தொடர்பான தெற்காசிய வலையமைப்பின் பங்குதாரர்களுடனான செயலமர்வு

வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுப்பது மற்றும் எதிர்கொள்வது தொடர்பான தெற்காசிய வலையமைப்பின் பங்குதாரர்களுடனான செயலமர்வு அண்மையில் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இராணுவத்தினரால் நெற்பயிர் சாகுபடி செய்யும் பகுதிகளில் ட்ரோன் தொழில்நுட்ப முறை பயன்படுத்தல்

மிக நவீன மற்றும் விஞ்ஞான நடைமுறைகளை கடைப்பிடித்து, இலங்கை இராணுவம் முதன்முறையாக வெள்ளிக்கிழமை (ஜூன் 02) காலை ஜயவர்தனபுர இலங்கை இராணுவ தலைமையக வளாகத்தை சுற்றியுள்ள 8.5 ஏக்கர் பரப்பளவில் இராணுவ நெற் பயிர்ச்செய்கைகளுக்கு கிருமி நாசிகள் மற்றும் களை நாசிகளை தெளிப்பதற்கு சோதனை அடிப்படையில் ஆளில்லா விமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது.



பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

கிளிநொச்சி மாணவர்களுக்கு இராணுவத்தினரால் கரப்பந்தாட்ட பயிற்சி

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் இலங்கை இராணுவத்தின் 57 ஆவது காலாட்படைப் பிரிவு கிளிநொச்சி பிரதேச மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் அண்மையில் கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தில் கரப்பந்தாட்டப் பயிற்சிப் பட்டறையொன்றை நடத்தியது.







பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

ஜப்பான் - இலங்கை நட்புறவு சங்கம் இலங்கை விமானப்படைக்கு தீயணைப்பு உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது

ஜப்பான் இலங்கை நட்புறவுச் சங்கம் திங்கட்கிழமை (மே 22) நடைபெற்ற வைபவத்தில் இலங்கை விமானப்படைக்கு தீயணைப்பு வாகனம்  மற்றும் இரண்டு ஏணிகளையும் அன்பளிப்பு செய்துள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

ஓவியர் ஒருவரினால் தேசிய போர் வீரர்களின் நினைவேந்தலை முன்னிட்டு ஓவியங்கள் கண்காட்சி

போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தற்போது இத்தாலி நாட்டின் நேப்லெஸில் பணிபுரிந்துவரும் ஓவியரான செனவிரத்ன தசநாயக்க அவர்களின் ஓவியக் கண்காட்சி மே 21இல் சென். அந்தோணி சர்வதேச பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து எகிப்திய தூதுவர் கலந்துரையாடல்

இலங்கைக்கான எகிப்திய தூதுவர் அதிமேதகு மகெட் மொஸ்லே இன்று (மே 12) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தார்.



பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு போர் வீரர்களின் கொடி அணிவிப்பு

போர் வீரர்கள் நினைவு மாதத்தினை முன்னிட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களுக்கு இன்று (மே 08)  போர்வீரர்களின் கொடி அணிவிக்கப்பட்டது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பாதுகாப்பு அமைச்சில் வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு தம்ம பிரசங்கம்

எதிர்வரும் வெசாக் பௌர்ணமி போயா கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று (மே 04) பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் விசேட ‘தம்ம’ பிரசங்கம் நடைபெற்றது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பாதுகாப்பு செயலாளருக்கு போர் வீரர்களின் கொடி அணிவிப்பு

போர் வீரர்கள் நினைவு மாதத்தினை முன்னிட்டு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களுக்கு புதன்கிழமையன்று (மே 03) போர்வீரர்களின் கொடி அணிவிக்கப்பட்டது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இந்திய விமானப்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் வி.ஆர்.சௌதாரி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.



பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

நமிபிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரியாவிடை சந்திப்பு

புதுடெல்லியை தளமாகக் கொண்ட நமீபியா குடியரசின் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் டைட்டஸ் சைமன் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். தனது பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள பாதுகாப்பு ஆலோசகர் மரியாதை நிமித்தமாக குறித்த சந்திப்பை மேற்கொண்டார்.



பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2023ஆம் ஆண்டுக்கான போட்டியில் இலங்கை விமானப்படை வில்வித்தை வீரர்கள் அதிக பதக்கங்களை வென்றனர்

அண்மையில் நடைபெற்ற 21வது தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2023ஆம் ஆண்டுக்கான போட்டியில் இலங்கை விமானப்படையின் பெண்கள் வில்வித்தை வீரர்கள் அதிக பதக்கங்களை வென்றுள்ளனர் என இலங்கை விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

மகஸ்தோட்டை மோட்டார் ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவ வீரர்கள் பதக்கங்கள் பெற்றனர்

அண்மையில் நுவரெலியாவில் நடைபெற்ற மகஸ்தோட்டை மோட்டார் ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவத்தை பிரதிநிதிப்படுத்திய மோட்டார் சைக்கிள் போட்டியாளர்கள் பல பதக்கங்களை வென்றெடுத்தனர்.



பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வறிய
குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிப்பு

யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் இலங்கை இராணுவ துருப்புக்கள் நன்கொடையாளர்களின் ஆதரவுடன் யாழ்ப்பாணம் துன்னாலை மற்றும் கட்டுடை ஆகிய இடங்களில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் இரு குடும்பங்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணித்துள்ளது.

 


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

சேவா வனிதா பிரிவினால் பாதுகாப்பு அமைச்சில்
“அவுருது பொல” விற்பனை கூடங்கள்

எதிர்வரும் தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் “அவுருது பொல” புதுவருட சந்தை இன்று (ஏப்ரல், 10) இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதுவருட சந்தையினை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் இன்று காலை வைபவரீதியாக திறந்துவைத்தார்.