--> -->

இராணுவத்தின் பெளத்த சங்கத்தினால் விகாரைகளுக்கு உலர் உணவுப் பொதிகள் விநியோகம்

ஏப்ரல் 07, 2020

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட பெளத்த விகாரைகளுக்கு இராணுவத்தின் பெளத்த சங்கத்தினால் உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் பெளத்த சங்க தலைவரும் மேற்கு பாதுகாப்புப்படை கட்டளை தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன, கொழும்பில் உள்ள சுமார் 16 பெளத்த விகாரைகளுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி இத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

விகாரைகளுக்கு உலர் உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் பிரதான நிகழ்வு ருக்மல்கம தர்ம விஜயலோகா விகாரையில் இடம்பெற்றது. உலர் உணவுப் பொருட்கள் தர்ம விஜயலோகா விகாரையின் பிரதம விகாராதிபதியும் கோட்டை ஸ்ரீ கல்யாணி சமகிரி சங்க சபையின் மகாநாயக்க தேரருமான அதி வண. இத்தாயப்பானே ஸ்ரீ தம்மலங்கார நாயக்க தேரரிடம் கையளிக்கப்பட்டது.