--> -->

இன்று அதிக எண்ணிக்கையிலான ஊரடங்கு சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிப்பு

ஏப்ரல் 08, 2020

    
•    ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக பொலிஸார் விரைவில் கடும் சட்ட நடவடிக்கை

இன்று (08) அதிகாலை 6.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தினுள் அதிக எண்ணிக்கையிலான ஊரடங்கு சட்ட மீறல்கள் மூலம்  சுமார் 1,800 கைதுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மார்ச் மாதம் 20ஆம் திகதியிலிருந்து சுமார் 18,000 க்கும் அதிகமான நபர்களும் சுமார் 5,000 வாகனங்களும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கம்பஹா, அனுராதபுரம், சிலாபம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான ஊரடங்கு சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளன.

இப் பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்கள் மீது விரைவில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது சட்டம் ஒழுங்கை நிருவகிக்க வீடுகளில் இருந்து பெரும்பான்மையான மக்கள் ஒத்துழைப்பு வழங்கியமைக்கு பொலிஸார் தமது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர். நாட்டில் கொவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போலி ஆவணங்களை சமர்ப்பித்து ஊரடங்கு சட்ட அனுமதியை பெற முயற்சிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.