--> -->

கொரோனா வைரஸ் நோயாளிகளைக் கையாள கடற்படையினரால் உருவாக்கப்பட்டுள்ள 'மெடி மேட்' ஸ்மார்ட் உபகரணம்

ஏப்ரல் 09, 2020

இலங்கை கடற்படையினர், டொக்டர் நெவில் பெனாண்டோ போதனா வைத்தியசாலைக்கு தொலைவிலிருந்து இயக்கக்கூடிய 'மெடி -மேட்' எனும் ஸ்மார்ட் உபகரணத்தை நேற்று (ஏப்ரல்,08)கையளித்தனர்.

துஷார கெலும் வாதசிங்க என்பவருடைய கண்டுபிடிப்பை ஆதாரமாகக் கொண்டு இலங்கை கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவு மேலும் புதிய அம்சங்கள் பலவற்றை உள்ளடக்கி மெடி-மேட் எனப்படும் இவ்வுபகரணத்தை உருவாக்கியுள்ளது.

டொக்டர் நெவில் பெனாண்டோ போதனா வைத்தியசாலையில் அறிமுகப்படுத்தப்பட்ட

இந்த உபகரணம் மூலம், வைத்தியர்,  நோயாளிக்கு அருகில் செல்லாமல் தூரத்திலிருந்தபடியே அதனை இயக்கி நோயாளிக்கு சிகிச்சையளிக்க முடிவதுடன் நோயாளிக்கான மருந்து, உணவு மற்றும் பானங்களையும் இந்த உபகரணத்துக்கூடாக வழங்க முடியும். இவ் உபகரணத்தின் எந்த ஒரு உடல் பாகம் நேரடித் தொடர்பு கொள்ளாமல் நோயாளியை தொற்று நீக்கம் செய்யும் திறன் கொண்டது.