--> -->

கடல் மார்க்கமாக நுழையும் சட்டவிரோத குடியேற்றகாரர்களை கண்டறிய இலங்கை விமானப்படையினரார் வான்வழி கண்காணிப்பு

ஏப்ரல் 15, 2020

உலகளாவிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலைகளை சாதகமாக பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசிக்கும் சட்ட விரோத குடியேற்றக்காரர்களை கண்காணிக்கும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இலங்கை விமானப் படை, வான்வழி கண்காணிப்பினை ஆரம்பித்துள்ளது.

விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் சுமங்கல டயஸின் பணிப்புரைக்கமைய, ரத்மலானை மற்றும் சீனக்குடா விமானப்படை தளங்களிலிருந்து இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான வை-12 ரக விமானங்கள், விமானப்படையின் வான் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ரவி ஜெயசிங்கவின் தலைமையில் வான்வழி கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இலங்கையின் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை கடக்க முயற்சிக்கும் கப்பல்களைக் கண்காணிப்பதற்காக இந்த விமானம் ஈடுபடுத்தப்படவுள்ளது. குறித்த விமானங்கள் இலங்கையின் சர்வதேச கடல் எல்லைக் கோடு வழியாக மன்னார் முதல் பருத்தித்துறை வரை கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன.

 

 

இதற்கு மேலதிகமாக, இலங்கை இலங்கை விமானப்படை நாடளாவிய வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நாட்டை எட்டு முக்கிய பகுதிகளாக வகுத்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இலங்கை விமானப்படையினர், இந்த நடவடிக்கைகளுக்காக வை-12 ரக விமானம் மற்றும் பெல் 212 ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.