--> -->

முதல் முறையாக இலங்கை பெண்கள் ஐக்கிய இராச்சிய இராணுவ கல்லூரியில் பட்டம்

ஜனவரி 20, 2019

இலங்கை விமானப்படையை சேர்ந்த பெண்கள் இருவர் ஐக்கிய இராச்சியத்தின் வட யோக்க்ஷயரிலுள்ள இராணுவ கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளனர். இம்மாதம் 04ஆம் திகதி நாட்டிலிருந்து சென்று கேட்டேரிக் இல் இடம்பெற்ற அனைத்து ஆயுத அடிப்படை ட்ரில் பயிட்சியினை நிறைவு செய்த பிளைட் லெப்டினன்ட் லக்க்ஷிக அட்டேல் மற்றும் கோபல் அமரசேன டீஎஸ்என்கே ஆகிய இருவருமே இவ்வாறு தமது பட்டத்தினை பெற்றுள்ளனர். இலங்கையில் முதன் முதலாக இப்பயிற்சியில் கலந்துகொண்டு இப்பட்டத்தினை பெற்றுள்ளமை விஷேட அம்சமாகும்.

இப்பயிற்சியானது பங்கேற்பாளர்கள் ட்ரில் பயிற்சியினை எவ்வாறு செய்வது மற்றும் அதை எவ்வாறு கற்பிப்பது என்பது பற்றியதாகும். இவ்விரு விமானப்படை வீரர்களும் இராணுவ கல்லூரியில் தாம் பெற்றுக்கொண்ட அறிவு மற்றும் நிபுணத்துவங்களை ஏனைய வீரர்களுடன் பகிர்ந்துகொள்ள எதிபார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கேட்டேரிக் காலாட்படை பயிற்சி மையம் அமையப்பெற்ற பிரித்தானிய இராணுவத்தின் காலாட்படை வீரர்கள் அனைவரையும் பயிற்றுவிக்கும் பிரித்தானிய இராணுவ கல்லூரியில் இப்பயிற்சி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.