--> -->

மாலைதீவு, குவைத், மத்திய கிழக்கு, பங்களாதேஷ் நாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைக்க வெளிவிவகார அமைச்சு தீர்மானம்

மே 08, 2020

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாலை தீவு, குவைத், மத்திய கிழக்கு, பங்களாதேஷ் மற்றும் பிற நாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைத்து வருவதற்கான சாத்தியக்கூறுகளை வெளிவிவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு பரிசீலித்து வருகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தொழிலாளர் பிரிவினால் பாதிக்கப்படக்கூடிய துறைகளை மீள கட்டியெழுப்புவது தொடர்பாக அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட புதிய அமைச்சரவை பத்திரம் தொடர்பில் இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சி சேவைக்கு அளித்த விசேட நேர்காணலில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசின்ஹ ​​விளக்கமளித்துள்ளார்.

வெளிவிவகார, திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்வைத்த புதிய அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை நேற்றய தினம் ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், முதலில் தெற்காசிய நாடுகளில் கல்வி கற்கும் மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து ஏனைய நாடுகளிலுள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட தாகவும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலால் அச்ச நிலையில் இருந்த ஏனைய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை அந்தந்த நாடுகளில் இருந்து நாட்டுக்கு அழைத்து வர உதவி செய்யப்பட்டதாகும் அவர் மேலும் தெரிவித்தார்.

"எமது மூல அமைச்சரவை பத்திரத்தில், வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கை தொழிலாளர்கள் சிலர் அந்நாடுகளில் கடும் நெருக்கடியை எதிர்நோக்கும் ஒரு தரப்பினர் எனவும், எனவே வெளிநாடுகளில் கல்வி கற்ற மாணவர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டது போன்று அவர்கள் மீதும் விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அவர்களும் நாடு திரும்புவதற்குறிய வசதி வாய்ப்புகள் செய்து கொடுக்கப்படவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக திரு. ஆரியசின்ஹ தெரிவித்தார்.

இதற்கமைய, மாலைதீவில் வசிக்கும் 1,200-1,500 குற்பட்ட இலங்கையர்களும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு எதிர்நோக்கியுள்ள ஒரு தரப்பினர் என குறிப்பிட்டார்.

மேலும் அவர், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்காக அந்நாடுகளில் உள்ள வெளிவிவகார அமைச்சுக்களுடன் அமைச்சர் குணவர்தன பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பணிபுரியும் இலங்கயர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

"மத்திய கிழக்கு நாடுகளில் இந்த அச்சத்தினை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேற்பட்டதாகும். அவர்களில் 300 க்கும் அதிகமான பெண்கள் மற்றும் குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர். எனவே நாம், மத்திய கிழக்கு மற்றும் பிற நாடுகளில் பாதிக்கப்படக்கூடிய இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைத்து வர கவனம் செலுத்தி வருகின்றோம்” எனவும் குறிப்பிட்டார்.

 

https://www.mfa.gov.lk/media-release-7-5-2020/