--> -->

செப்பு தொழிற்சாலை ஊழியர்களிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவின் மேலதிக விசாரணை தொடர்கிறது

மே 28, 2019

வெல்லம்பிட்டிய செப்பு தொழிற்சாலையில் பணியாற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட ஒன்பது ஊழியர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேற்படி சந்தேக நபர்கள் தொடர்பில் நேற்றைய தினம் (மே,27 )நீமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்ட அறிக்கையை அடுத்து சந்தேக நபர்களை தேவைப்படும் சந்தர்பங்களில் விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அழைக்க கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை, மேற்படி தொழிற்சாலையின் மற்றுமொரு சந்தேக நபர் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்கள்,அதனை பார்வையிடுபவர்கள் மற்றும் அவற்றை பகிர்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் திணைக்களம் கேட்டுக்கொள்கின்றது. இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையிலும் மோதல்கள் மற்றும் குரோதங்களை ஏற்படுத்தும் நோக்கிலும் சிலர் சமூக ஊடகங்களை பயன்படுத்தி பழைய பதிவுகளை புதிய பதிவுகள் போன்று மீண்டும் பதிவிட்டு வருவதாகவும் தெரிவித்த அவர் இது தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறுக் கேட்டுக் கொண்டார்.

பதுரெலிய பொலிஸ் பிரிவின் திக்ஹேன பிரதேசத்திலுள்ள மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 972 கிராம் வெடிமருந்துகளுடன் பவித்ர புஷ்பகுமார என்ற சந்தேக நபரை கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். திக்ஹேன பிரதேசத்திலுள்ள பாடசாலைக்கு அருகில் கைக்குண்டு பொதியை வைத்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாரினால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வரும் சந்தேக நபரின் சகோதரனே இவ்வாறு வெடிமருந்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் நீர்கொழும்பு, அங்குருகாரமுல்ல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் காலாவதியான நிலையில் புதிது போன்று பொதி செய்யப்பட்டு விற்பனை செய்யும் நோக்கில் வைக்கப்பட்டிருந்த பெண்கள் பயன்படுத்தும் பெருந்தொகை அழகு சாதண பொருட்களை நீர்கொழும்பு பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் அவற்றுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடைய ஐஎஸ் ஐஎஸ் உறுப்பினர்கள் 15 பேர் இலங்கையிலிருந்து இந்தியாவின் லக்ஷதீப் தீவுக்கு தப்பிச் சென்றுள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாகவே நாங்கள் அறிந்தோம் எனினும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் மூலம் இலங்கை கடற்படையினருக்கு எதுவித உத்தியோகபூர்வ அறிவூப்புக்களும் கிடைக்பெறவில்லை. என்றாலும் அந்த தகவலை நாம் தட்டிக்களிக்காமல் உறுதிப்படுத்தப்படாத உத்தியோகபற்றற்ற தகவலாக கருத்திற் கொண்டு தேவையான நடவடிக்கைகள மேற்கொண்டுள்ளதாகவும் நாடு முழுவதிலும் உள்ள கடற்படை தளங்களுக்கு இது தொடர்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதுடன் கடல் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படையினருக்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் இலங்கை கடற்படையின் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார். என்றார்.

இதேவேளை, கொழும்பு மட்டக்குளி பிரதேசத்திலுள்ள பாலம் ஒன்றிற்கு அடியிலிருந்த கைவிடப்பட்ட நிலையிலிருந்த ட்ரோன் கமரா ஒன்றை இலங்கை கடற்படையினர் மீட்டெடுத்துள்ளனர். அது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடற்படையினர்
ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.