--> -->

தவறான பத்திரிகை அறிக்கை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

மே 24, 2019

4000 சிங்கள பௌத்த பெண்களுக்கு அறுவைச் சிகிச்சையின்போது கருத்தடை மேற்கொண்டதாக தேசிய தௌஹீத் ஜமாத்துடன் தொடர்புடைய வைத்தியர் ஒருவரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என தேசிய பத்திரிகை ஒன்று அதன் முன்பக்கத்தில் நேற்று (மே, 23) செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வைத்தியர் சுமார் 7000க்கும் அதிகமான அறுவைச் சிகிச்சையினை மேற்கொண்டுள்ளதகவும் அப்பத்திரிகை மேலும் தெரிவிக்கின்றது. மேற்படி பத்திரிகையில் கூறப்பட்ட சம்பவம் தொடர்பில் நாட்டிலுள்ள எந்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்படவோ அல்லது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டவோ இல்லை எனவும் கொள்ளுப்பிட்டி பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று (மே, 23) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவம் தொடர்பில் எவ்வித விசாரணைகளும் நடைபெறாத நிலையில் இது போன்ற செய்தி ஒன்றை வெளியிட்டமைக்கான முழுப் பொறுப்பையும் அதன் செய்தியை வெளியிட்ட போன்ற தேசிய பத்திரிகையும் அதனை எழுதிய ஊடகவியலாளருமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இருந்தபோதிலும், குருநாகலை பிரதேசத்தில் உள்ள வைத்தியர் ஒருவர் குருநாகல் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அந்த விசாரையானது அதிக சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலாகும் என பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்த அதேவேளை, இவ்வாறு கருத்தடையுடன் தொடர்புடைய பெண்கள் எவரிடமும் இருந்து இதுவரைக்கும் எந்தவித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது போன்ற செய்தியை வெளியிட்டமை தொடர்பில் குற்றவியல் விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

அக்குரெஸ்ஸ, ஊருமுத்த பகுதியில் நேற்று மாலை (மே, 22) சட்டவிரோத மதுபான நிலைய சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது அக்குரெஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் இணைப்பு செய்யப்பட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார். துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்ய நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருமணமான 35 வயதுடைய உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் இரு குழந்தைகளின் தந்தை என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.