வைரஸ் தொற்றிலிருந்து 420 கடற்படை வீரர்கள் குணமடைவு

ஜூன் 05, 2020

கொரோனா  வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் சில கடற்படை வீரர்கள் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். இதனால் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 420 ஆக உயர்வடைந்துள்ளது.

வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மேலும் 416 கடற்படை வீரர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.