--> -->

கொரோனா தொற்றுக்குள்ளான 13 பேரில் ஒன்பது பேர் கடற்படையினர்

ஜூன் 07, 2020

கெரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 13 பேர்களில் ஒன்பது பேர் இலங்கை கடற்படை வீரர்கள் என கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

ஏனைய நால்வரில் மூன்று பேர் ரஷ்யாவிலிருந்தும் ஒருவர் குவைத்திலிருந்தும் வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 33 கடற்படை வீரர்கள் சிகிச்சையின் பின் வெளியேறியுள்ளனர். இதனால் சிகிச்சையின் பின் வெளியேறிய கடற்படை வீரர்களின் மொத்த எண்ணிக்கை 472 ஆக அதிகரித்தது.

இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 847 கடற்படை வீரர்களின் 375 பேர் கொரோனா வைரஸ் காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.