விஸ்வமடு பிரதேசத்தில் 40kg டிஎன்டி ரக வெடிபொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

ஜூன் 07, 2020

விஸ்வமடு, உடையார் கட்டு பிரதேசத்தில் சுமார் 40 கிலோகிராம் டிஎன்டி ரக வெடிபொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

உடையார்கட்டு பகுதியில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பீப்பாயிருந்து குறித்த வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த வெடிபொருள் தொகுதி, மனிதாபிமான நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலை புலிகளினால் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட கைவிடப்பட்டிருக்கலாம் என நம்ப படுவதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வெடிபொருட்கள் இலங்கை கடற்படையின் வெடிபொருள் அகற்றும் பிரிவினரால் பாதுகாப்பாக அகற்றப்பட்டதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.