கொரோனா வரைஸ் தொற்றுகுள்ளாகி குணமடைந்தோர் 1055 ஆக அதிகரிப்பு

ஜூன் 09, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில்  பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியோரின் மொத்த எண்ணிக்கை 1,057 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட 789 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக மேலும் 22 பேர் நேற்று (ஜூன் 8) அடையாளம் கானப்பட்டதை அடுத்து, தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,857 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.