--> -->

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணம் கொள்ளையிட்ட நபார் கைது

ஜூன் 10, 2020

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணத்தை கொள்ளையிட்டு சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பணத்தை கொள்ளையிட்டு பின்னர் முச்சக்கரவண்டி ஒன்றில் தப்பிச்சென்ற சென்ற வேளையில் பொரளையில் வைத்து நேற்று (ஜூன் 9) அவர் இவ்வாறு  கைதுசெய்யப்பட்டுள்ளார்.  

அண்மையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஷேட வைத்தியர் பயிற்சியினை மேற்கொள்வதற்காக வருகைதந்த வைத்தியர் ஒருவர் என அடையாளம்காணப்பட்ட குறித்த சந்தேக நபரே கொழும்பு தேசிய வைத்தியசாலை பண கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், அவர் ஹொரண பகுதியை சேர்ந்த கொழும்பு கொட்டா வீதியில் தற்காலிகமாக வசிக்கும் 33 வயதுடைய சந்தேகநபர் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சாலிய ரத்நாயக தெரிவித்தார்.  

இச்சம்பவத்தின்போது, அங்கு சேவையில் இருந்த இரு அரச புலனாய்வுத்துறை அதிகாரிகள் குறித்த சந்தேக நபர் தப்பிச்சென்ற வேளையில் அவரை துரத்தி செல்லும்போது அலுவலக வேலைநிமித்தம் வைத்தியசாலைக்கு வருகைதந்திருந்த பிரதம பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்தவின் உதவியுடன் கைதுசெய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.  

குறித்த சந்தேக நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ரூபா 7.9 மில்லியன் பணத்தை நேற்று (9) கொள்ளையிட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிகவிசாரனைகள் மருதானை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.