--> -->

12,533 பேர் தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி

ஜூன் 11, 2020
முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் இதுவரை 12533 பேர் தங்களது தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்து வெளியேறியுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டுத் மையம் தெரிவித்துள்ளது.
 
இதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள 43 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 5,060 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அம்மையம் மேலும் தெரிவித்துள்ளது.